டூவீலர், கார்கள் பதிவு அதிகரிப்பு
தேனி, செப் 5–
தேனியில் 2026 ல் முதல் 6 மாதங்களில் 8862 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 6634 டூவீலர்கள், 1003 கார்கள், 190 ஆட்டோக்கள், மின்சார ஆட்டோ (1), 18 பள்ளி, கல்லுாரி பஸ்கள் அடங்கும். கடந்த 2025 ல் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 6356 டூவீலர்களும், 956 கார்களும், 102 ஆட்டோக்களும் பதிவு செய்யப்பட்டன. அதன்படி 2026 ல் கடந்த ஆண்டை காட்டிலும் டூவீலர்கள், கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாண்டு டிசம்பர் இறுதிக்குள் விவசாய பயன்பாட்டு வாகனங்கள் பதிவு அதிகரிக்கும் என தேனி ஆர்.டி.ஓ., தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement