கண்களுக்கு கூடுதல் அழகு தரும் 'ஐலாஷ் எக்ஸ்டென்ஷன்'
கா ந்த கண்களுக்கு மேலும் எழில் கூட்டி, வசீகரமான பார்வையைத் தர உதவும் 'ஐலாஷ் எக்ஸ்டென்ஷன்' முறையில் பல வகைகள் உள்ளன என்கிறார், அழகுக்கலை நிபுணர் ரம்யா.
இயற்கையான கண் இமைகளுடன், மிக நுண்ணிய செயற்கை இமைகளை தனித்தனியாக பொருத்தி, இமைகளின் நீளம், வளைவு மற்றும் அடர்த்தியை அதிகரிப்பதே ஐலாஷ் எக்ஸ்டென்ஷன்.
ஒவ்வொரு இயற்கை இமையின் மீதும், ஒரே ஒரு செயற்கை இமையை மட்டும் பிரத்யேகமாக ஒட்டுவது கிளாசிக் ஐலாஷ்.
இது தினசரி மஸ்காரா பயன்படுத்தினால் கிடைக்கும் நேர்த்தியான, இயற்கையான தோற்றத்தைத் தரும். சற்று அடர்த்தியான இமைகளை விரும்புபவர்கள், ஹைப்ரிட் ஐலாஷ் பயன்படுத்தலாம். இது சற்று அடர்த்தியாகவும், 'ஸ்பைக்கி' (spiky) பினிஷிங்குடனும் காட்சியளிக்கும். அடர்த்தியான, மென்மையான இமைகளை விரும்புபவர்களுக்கு வால்யூம் ஐலாஷ் பெஸ்ட் சாய்ஸ். மிக நைஸான 2 முதல் 6 செயற்கை இமைகளை விசிறி போல விரித்து, ஒரு இயற்கை இமையின் மேல் பொருத்துவார்கள்.
இது அடர்த்தியான, எடுப்பான டிராமாடிக் தோற்றத்தைத் தரும். அல்ட்ரா கிளாமர் லுக் வேண்டும் என்றால் மெகா வால்யூம் ஐலாஷ் பயன்படுத்தலாம். மிக மிக மெல்லிய இமைகளை அதிக எண்ணிக்கையில் குவித்து, அடர்த்தியான விசிறிகளாக இமைகளில் பொருத்துவார்கள்.
இது பார்ட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்ற, அட்டகாசமான டார்க் அண்ட் கிளாமரஸ் லுக் தரும்.
-சுகன்யா
மேலும்
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
-
அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை
-
போட்டி தேர்வுக்கு தயாராகலாம்