தவறான மின் கணக்கீடு: மின் நுகர்வோர் 'ஷாக்' 

திருப்பூர்:திருப்பூர் காங்கயம் ரோடு, அமர்ஜோதி கார்டன், 8வது குறுக்கு வீதியைச் சேர்ந்த பத்மநாபன், மின்வாரிய அதிகாரிக்கு அனுப்பிய புகார் மனு:

கடந்த மாத மின் கட்டண கணக்கீட்டில், 2,632 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக கூறி, 25,720 ரூபாய் கட்டணம் செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்தது. வழக்கமாக, 7,000 முதல் 8,000 ரூபாய் வரை மட்டுமே மின் கட்டணம் வரும்.

மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர், ஸ்கேனர் முறையை பயன்படுத்தாமல் கையடக்க நோட்டில் குறித்து சென்று, பின்னர் கம்ப்யூட்டரில் தவறாக பதிவேற்றியதே இந்த திடீர் கட்டண உயர்வுக்கு காரணம்.

தவறை கண்டறிந்து சரிசெய்வதற்கு பதிலாக, முழுத் தொகையையும் வசூலிக்க மின்வாரிய அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பை துண்டிப்பதாகவும் அச்சுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வயோதிக நிலையில், இந்த விவகாரம் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தவறான மின் கட்டண கணக்கீட்டை சரிசெய்ய வேண்டும்.



Advertisement