இரண்டு லட்சம் பேருக்கு தொழில் பழகுநர் பயிற்சி
திருப்பூர்: ''தென் மாநிலங்களில் இரண்டு லட்சம் பேருக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்று மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரிய இயக்குநர் விஜய் சங்கர் பாண்டே தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில், விஜய் சங்கர் பாண்டே கூறியதாவது:
தென்மாநிலங்களில் மட்டும் இரண்டு லட்சம் பேருக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சியாளர்களை எளிதில் கண்டறிய, வடமாநிலங்களில் உள்ளவர்கள் உட்பட 78 ஆயிரம் மாணவர்களின் தரவுத்தளத்தை வழங்க தயாராக உள்ளோம். ஆர்வமுள்ள நிறுவனங்கள் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்ட இணைய தளத்தை பயன்படுத்தலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.
முக்கிய அம்சங்கள் திட்டத்தில் சேரும் பட் டதாரிகளுக்கு மாதம் ரூ.12,300 உதவித் தொகை
டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.10,900, இதில் 50 சதவீதம் மத்திய அரசின் மானியம்
30 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், தங்களது மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2.5 முதல் 15 சதவீதம் வரை பயிற்சியாளர்களை நியமிக்கலாம்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை விவசாயிகள் எதிர்பார்ப்பு: நெல் நடவு பணியை துவங்காமல் காத்திருப்பு
-
கூட்டணியில் காங்கிரசை அடுத்து கம்யூ., கட்சியினரும்... குழப்பப் பேச்சு! : எரிச்சல் காட்டத் துவங்கும் த.வெ.க., உறுப்பினர்கள்
-
மானாமதுரை, இளையான்குடியில் உடைந்து விழும் மின்கம்பங்கள்
-
சிவகங்கையில் இருளில் மூழ்கிய பஸ் ஸ்டாண்ட்: அச்சத்தில் பயணிகள்
-
திருப்புத்துாரில் மாட்டு வண்டி பந்தயம்
-
பிரதான சாலையில் பேச்சாளை மீன் கழிவுநீரால் துர்நாற்றம்