வரும் 9ல் த.வெ.க., கூட்டணி கூட்டம்: காங்கிரஸ் - வி.சி.க.,வுக்கு அழைப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம், வரும் 9ல், சென்னை - பனையூரில் நடக்கிறது. அதற்காக, காங்கிரஸ், வி.சி.க.,வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
த.வெ.க., அரசுக்கு ஆதரவு தரும் கட்சி தலைவர்கள் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில், கடந்த ஜூலை 1ம் தேதி நடந்தது. அதில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பங்கேற்கவில்லை.
இந்த சூழலில், த.வெ.க., கூட்டணி கட்சிகளின், இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், வரும் 9ம் தேதி மாலை 4:00 மணிக்கு, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில் நடக்க உள்ளது.
இதற்காக, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர், நேற்றுமுன்தினம், சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு, நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
மேலும், சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூரை, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர், நேற்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
அப்போது, ராஜ்யசபா காங்., - எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக அமைச்சர் ராஜேஷ் குமார் ஆகியோர் இருந்தனர்.
தொடர்ந்து, சென்னை அசோக் நகரில் உள்ள, வி.சி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் திருமாவளவனை, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இதுகுறித்து, காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில், ''வரும் 9ல் நடக்கும் த.வெ.க., கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில், காங்., பங்கேற்கும்.
''இந்த கூட்டத்தில், கூட்டணி பெயர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். வரும் 2029ல், ராகுலே பிரதமர் வேட்பாளர்; முதல்வர் விஜயும், அமைச்சர்களும் இதில் தெளிவாக உள்ளனர்,'' என்றார்.
வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறுகையில், ''வரும் 9ல் நடக்கும் கூட்டத்தில், த.வெ.க., தலைமையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, ஒரு முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.
பிரதமர் வேட்பாளர் ராகுல் என்பதை டிவிகே ஒப்புக்கொண்டால் அது பாஜகவுடன் இணக்கமாக இருக்கிறது என்பதன் அறிகுறி .....
கடந்த 2024 ஏப்ரலில்தான் மக்களவைத் தேர்தல் வந்தது .... 2029 ஏப்ரலில் வரப்போகும் தேர்தலுக்குப் பாதி கிணறு கூடத் தாண்டவில்லையே ?
கூட்டணி கட்சிகள் எல்லாம் முந்தைய கூட்டணியில் இதுவரை அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு செய்ததை தான் பேரம் செய்ய போகிஇறார்கள். என்ன?
அடுத்த நாளே சட்ட சபையில் தவளைகள் சொல்லப்போகுது. அதனால் கூட்டணி கட்சிகள் உஷாராக இருப்பது அவசியம்.
சும்மா கூட்டம் முடிந்தபின் தாயுள்ளத்தடன் சுமுகமாக முடிந்தது என்று சொல்லி கூட்டணி கட்சிகள் பெட்டி கோபாலு மூலம் அறிக்கை விடாம இருக்கணும்.
விவசாய கடன் நேர்மையான முறையால் தள்ளுபடி செய்யவில்லை
ஒரு குடும்பத்தில் ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு குறைந்த கடன் தள்ளுபடி என்பது மிக பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும்.
எடுத்துக்காட்டு தமிழ்நாடு அரசு மானியம் 75000 குறைந்த கடன் தொகை 40000 ரூபாய் என்றல் மீத 35000 ரூபாய் என்ன ஆச்சு
தமிழகத்தில் காங்கிரஸ், விசிக, வைகோவின் மதிமுக போன்ற கட்சிகள் அழிந்து நாசமாய் போய்ட்டானுக
நீங்களும் அந்த லிஸ்டில்தான் இருக்கிறீர்கள் இந்த லெட்சணத்தில் இந்தக் கூட்டம் தேவையா?
மொத்தத்தில் உங்களை தேர்வு செய்த தமிழக மக்களை செருப்பாலயே அடித்தாலும் என் மனசு ஆறாது
முதல்வர் விஜய் அவர்களே, உங்கள் அரசு ராஜினாமா செய்துவிட்டு புதிய தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக நீங்கள் இந்த கூட்டணி கூட்டத்தில் அறிவித்தால், இந்த ஒட்டுண்ணிக் கட்சிகள் அனைத்தும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களிடம் கெஞ்சும் காலில் விழும். ஏனென்றால், திரும்பி தேர்தல் வந்தால் இவர்கள் ஆதரவு இல்லாமல் உங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும். ஏனெனில், அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்ய உங்களுக்கு அதிக சுதந்திரம் இருக்கும், தீயக்கட்சியின் தேர்தல் பரப்புரையை மிகவும் சுலபமாக உங்களால் உடைக்க முடியும் ஏன் என்றால் திமுக செய்த ஊழல் பட்டியல் உங்களிடம் உள்ளது. ADMK அதை செய்யவில்லை ஏன் என்றால் ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். தயவு செய்து இதை செய்யுங்கள் காங்கிரஸ், VCK, இரண்டு கம்யூனிஸ்ட்கள் தொல்லை தீரும்.
வி.சி.க தான், உங்களை சிக்கலில் மாட்டிவிட போகுது...
ஒரு பக்கம் பாஜகவின் திராவிட ஒழிப்பு. மறுபக்கம் தவெகவின் காங்கிரஸ் ஒழிப்பு. ஜனநாயகத்துக்கு கம்முனிசம் என்ற விஷம் கலந்து அதை மாற்றி நாட்டை அரை நூற்றாண்டுக்கு மேல் இருண்ட காலத்துக்கு கொண்டு சென்ற காங்கிரஸ் மற்றும் கம்முனிச கோட்பாடுகளை மையமாக வைத்து அதை பகுத்தறிவு என்று பொதுமக்களை மூளைச்சலவை செய்து பெரும் செல்வமீட்டிய தீம்கா என்கிற மாபெரும் தீய சக்திகள் இரண்டும் முற்றிலுமாக அழிந்தால் அது இந்தியாவுக்கு நல்லது.
ஓஓ திமுக கள்ளாபெட்டி கூட்டணி கூட்ட்ம்
திமுக விற்கு அழைப்பு கொடுத்தாச்சா??
காங்கிரசுக்கு என்னமோ செல்வாக்கு இருப்பது போல காங்கிரசார் பந்தா காட்டுவது மிகப்பெரிய நகைச்சுவையை தருகின்றது. கருவாடு ஒருவேளை மீன் ஆகலாம். ஆனால் காங்கிரஸ் ஒருபோதும் தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலேயே காணாமல் போய்விட்டது. அதனை உயிர்ப்பிக்க விஜய் முயற்சி செய்கின்றார் போலும். எப்போ வேண்டுமானாலும் கழன்று கொள்ளும் நிலையில் விசிக உள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி கொடுத்தால் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்பது அவர்களது கடந்தகால வரலாறு. அதனால் திமுக பக்கமே சாய விரும்புவார்கள் கம்யூனிஸ்டுகள் . மதிமுகவை கண்டுக்கலையே. ஐயோ பாவம் வைகோ. கிருத்துவ மிஷனரியிடமிருந்து சிபாரிசு கடிதம் வாங்கிட்டு வந்தால் ஒருவேளை அழைப்பு இருக்கும் போல. திமுகவை பெரிய அளவில் எதிர்ப்பதாலேயே நமது ஆதரவு இப்போதைக்கு விஜய்க்கு நிச்சயம் உண்டு