முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த பெரியசிறுவத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்,63; இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பட்டத்தாள் என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பட்டத்தாள் தரப்பினர் ஒன்று சேர்ந்து பரமசிவம் மற்றும் வேல்ராஜினை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் காயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில், பட்டத்தாள், கணேசன், குமார், கண்ணன், கல்பனா, கண்மணி ஆகிய 6 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement