விவசாயி வீட்டில் தீ விபத்து

சின்னாளபட்டி:பெருமாள்கோயில்பட்டியில் வசிக்கும் விவசாயி சிவக்குமார். நேற்று இவரது வீட்டில் உள்ள பிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீயால் பீரோவில் இருந்த முக்கிய ஆவணங்கள், துணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காஸ் சிலிண்டர், பிற பொருட்களை வெளியேற்றினர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். சின்னாளபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement