பனை விதை நடும் நிகழ்ச்சி

பாகூர்: புதுச்சேரி வனத்துறை சார்பில், பாகூர் அடுத்த மனப்பட்டு – புதுக்குப்பம் வனப்பகுதியில், குறிப்பாக கடற்கரை கிராமங்களில் பனை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்றவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.

வனத்துறை வனப் பாதுகாவலர் அருள்ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பனை மரத்தின் பயன்கள் குறித்து விளக்கி, பனை விதைகளை நடவு செய்யும் பணியை துவக்கி வைத்தார்.

பின், அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை வனத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பனை விதைகளை நடவு செய்தனர். இந்த ஆண்டு, இதுவரை 5 லட்சத்து 70 ஆயிரம் பண விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement