பைக் மீது ஆம்னி பஸ் மோதி ஒருவர் பலி

வேப்பூர்: பைக் மீது தனியார் ஆம்னி பஸ் மோதியதில் ஒருவர் இறந்தார்.

வேப்பூர் அடுத்த கழுதுாரை சேர்ந்தவர் சடையமுத்து, 31; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு தனது, பைக்கில் வேப்பூரிலிருந்து, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், இரவு 8:00 மணியளவில், சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த அரியநாச்சி பஸ் நிறுத்தம் அருகே, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த, தனியார் ஆம்னி பஸ், மோட்டார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதில் படுகாயமடைந்த சடையமுத்துவை, வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement