பைக்கில் காட்டுப்பன்றி மோதியதில் ஒருவர் பலி

அருப்புக்கோட்டை, செப். 7 -

அருப்புகோட்டை அருகே மெட்டுக்குண்டு கடமங்குளத்தை சேர்ந்த கொழிலாளி ராமர், 54, இவர் நேற்று முன்தினம் பைக்கில் தனது சக தொழிலாளி கோபால், 45, உடன் அருப்புக்கோட்டைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இரவு 8:00 மணிக்கு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். அருப்புக்கோட்டை விருதுநகர் அணுகு சாலை சந்திப்பை கடந்து செல்லும்போது, திடீரென்று ரோட்டின் குறுக்கே ஓடிய காட்டுப்பன்றி பைக்கின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவரையும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராமர் இறந்தார். கோபால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

----

Advertisement