தேவகோட்டை விபத்தில் தலை கீழாக நின்ற கார்

தேவகோட்டை: தேவகோட்டை அருகே இருமதி விலக்கில் அதிவேகமாக சென்ற கார் விபத்திற்குள்ளாகி, இரும்பு தடுப்புகளில்மோதி தலைகீழாக நிற்கிறது.

-காரைக்குடி கழனிவாசல் ஆறுமுகம் மகன் கார் டிரைவர் கணேஷ்குமார் 27. நேற்று முன்தினம் மாலை காரில் வாடிக்கையாளர்களை இறக்கி விட்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சகோதரர் மற்றும் நண்பருடன் காரைக்குடிக்கு திரும்பினார். ராமேஸ்வரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருமதி விலக்கு பாலம் அருகே வந்தபோது, நாய் ரோட்டின் குறுக்கே சென்றுள்ளது. அப்போது பிரேக் பிடித்ததால் கார் நிலைதடுமாறி இரும்பு தடுப்பில் மோதி தலைகீழாக நின்றது. காரில் இருந்தவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement