சிவகங்கையில் இருளில் மூழ்கிய பஸ் ஸ்டாண்ட்: அச்சத்தில் பயணிகள்

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் உள்ள மின் விளக்குளில் போதிய விளக்குகள் இரவு நேரத்தில் எரியாததால் இருள் மூழ்கி பஸ் ஸ்டாண்ட் காணப்படுகிறது. இதனால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பஸ் ஸ்டாண்டில் நிற்பதற்கே அச்சப்படுவதாக புகார் தெருவிக்கின்றனர்.

சிவகங்கை நகர் மாவட்டத்தின் தலைநகர். நகரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

நகரில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற தலைமை அலுவலகங்கள், மாவட்ட நீதிமன்றம், அரசு கலை கல்லுாரிகள் உள்ளிட்டவை உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் தினசரி பஸ் பயணத்தின் மூலம் வந்து செல்கின்றனர்.

சிவகங்கை நகரத்திலிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் பிற மாவட்டங்களுக்கும் சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரி வந்து செல்கின்றனர்.

சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து 34 டவுன் பஸ்களும், 32 புறநகர் பஸ்களும், சென்னைக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் போதிய அடிப்படை வசதி கிடையாது. இரவில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் திருப்புத்துார் மற்றும் மதுரை பஸ் நிறுத்தும் பகுதி போதிய வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்து உள்ளது.

இதனால் இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நிற்பதற்கே அச்சப்படுகின்றனர்.

அதேபோல் பஸ் ஸ்டாண்டில் போதிய சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் அடிக்கடி செல்போன் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் நகரில் உள்ள பஸ் ஸ்டாண்டில் போதிய மின் விளக்குகள் எரிவதற்கும், பஸ் ஸ்டாண்டின் அனைத்து பகுதியிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement