வ.உ.சி., பிறந்த நாள் விழா

சிவகங்கை: சிவகங்கை, மானாமதுரையில் வ.உ.சிதம்பரம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை அரண்மனை வாசலில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகராட்சி முன்னாள் துணை தலைவர் செல்வரங்கன் தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் குழந்தைராணி நாச்சியார், இளங்கோவன், த.வெ.க., மாவட்டசெயலாளர் முத்துபாரதி, அ.தி.மு.க., ஜெ., பேரவை மாவட்டசெயலாளர் இளங்கோவன், தி.மு.க., நகர் செயலாளர் துரைஆனந்த், கவுன்சிலர் ஜெயகாந்தன், இந்திய கம்யூ., மருது, சகாயம், காங்., நகர் தலைவர் விஜயகுமார், முன்னாள் கவுன்சிலர் வேலுநாச்சியார் லயன்ஸ் கிளப் தலைவர் ஸ்ரீவித்யா கணபதி உட்பட சர்வ கட்சியினர், பல்வேறு அமைப்பினர், அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மானாமதுரை: வ.உ. சிதம்பரம் படத்திற்கு வழக்கறிஞர் முத்துக்குமார், முன்னாள் தாசில்தார் அமல்ராஜ், நகராட்சி கவுன்சிலர் சோமசதீஷ்குமார், லயன்ஸ் நிர்வாகி கலை சந்திரன், பிள்ளைமார் சங்க நிர்வாகிகள் குப்பு, சக்கரை, சேகர் பங்கேற்றனர். இடைக்காட்டூரில் இலவச மருத்துவ முகாம், அன்னதானம் நடந்தது.

Advertisement