வரதராஜப் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

புதுச்சேரி: வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி உற்சவம் நேற்று நடந்தது.

வில்லியனுாரில் பிரசித்திப்பெற்ற பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சத்யபாமா ருக்மணி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் விழா நேற்று முன்தினம் துவங்கியது.

இதையொட்டி அன்று இரவு 10:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், நள்ளிரவு 12:00 மணிக்கு அவதார உற்சவம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு வெண்ணெய்த்தாழி கிருஷ்ணர் வீதியுலா, மாலை 6:00 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது.

இன்று முதல் வரும் 13ம் தேதி வரை தினமும் காலை 10:00 மணிக்கு சுவாமி திருமஞ்சனம், இரவு சுவாமி உள்புறப்பாடு நடக்கிறது. 13ம் தேதி மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.

Advertisement