மொபட் மோதி கல்லுாரி மாணவர் சாவு

சேலம்:சேலம், அஸ்தம்பட்டி கண்ணணுார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, லட்சுமி மகன் சந்தோஷ்குமார், 19. சேலம் அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார். கடந்த, 3 காலை, 11:30 மணிக்கு, எம்.டி., யமஹா பைக்கில் ஹெல்மெட் அணியாமல் கல்லுாரிக்கு வந்துகொண்டிருந்தார்.

ஜட்ஜ் பங்களா சந்திப்பில் வந்தபோது, கோரிமேடு நோக்கி, 'அக்சஸ்' மொபட்டில் வந்தவர், சந்தோஷ்குமார் பைக் மீது மோதினார். இதில் சந்தோஷ்குமார் துாக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். லட்சுமி புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement