தண்ணீர் சுட வைக்கும் 'ஹீட்டர்' வெடித்து தீ
ஆத்துார்:ஆத்துார்,
முல்லைவாடி, கலைஞர் காலனியை சேர்ந்தவர் வீரன், 40. இவர் நேற்று
முன்தினம் மாலை, குடும்பத்தினருடன் வெளியே சென்றனர். இரவு, 8:40
மணிக்கு, அவரது வீட்டில் புகை வந்ததால், மக்கள் ஆத்துார் தீயணைப்பு
நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
10 நிமிடத்தில் அங்கு சென்ற தீயணைப்பு
வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். விசாரணையில் தண்ணீர் சுட
வைக்கும் ஹீட்டரை, 'ஆப்' செய்யாமல் சென்றதில், அது ஒரு கட்டத்தில்
வெடித்து தீப்பற்றியது தெரிந்தது. இதில், வீட்டில் இருந்த துணிகள்
எரிந்து நாசமாகின. ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
Advertisement
Advertisement