'பல நுாற்றாண்டு நடுநிலையோடு செய்திகள் வெளியிட வாழ்த்து'

3

சென்னை: 'தினமலர்' 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் வாழ்த்து செய்தி:

உண்மை, நம்பிக்கை, ஒற்றுமை ஆகியவற்றை மட்டுமே வெளியிடுவது என்பதை கொள்கையாக வைத்து, 20ம் நுாற்றாண்டு தொடங்கி, பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும், 'தினமலர்' நாளிதழின், 75 ஆண்டுகள் நிறைவு - நினைவு தபால் தலை வெளியீட்டு விழா, சிறப்பாக நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தபால் தலையை வெளியிட்டது சிறப்புக்குரியது. 'தினமலர்' நாளிதழ், மேலும் பல நுாற்றாண்டுகள் நடுநிலையோடு செய்திகள் வெளியிட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement