கிடைத்த மதிப்பெண்ணுக்கு ஏற்ப வாழ பெற்றோர் கற்பிக்க வேண்டும் குமரி மாவட்டத்தினர் விழாவில் யோசனை
மதுரை: ''மதிப்பெண்களுக்கு ஏற்ப வாழ்வை சிறப்பாக அமைப்பது குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத்தர வேண்டும்'' என மதுரைவாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை ஆண்டு விழாவில் பேசினர்.
பேரவைத் தலைவர் முத்தம்பெருமாள் தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் அனந்த பத்மநாபராஜா வரவேற்றார். ஆண்டுவிழா மலரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் செந்தில் வெளியிட, வழக்கறிஞர் பிரபாகரன் பெற்றார்.
சிறப்பு விருந்தினர் விருதுநகர் மேலதாயில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் பேசுகையில், ''இன்றைய தலைமுறையினர் சமூக வலைதள வலைக்குள் சிக்கியுள்ளனர். உறவுகளின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்ல வேண்டும். மதிப்பெண்களை வைத்து அழுத்தம் தராமல், கிடைத்த மதிப்பெண்ணுக்கு ஏற்ப வாழ்வை அமைக்க பெற்றோர் கற்றுத்தர வேண்டும்'' என்றார். வலையங்குளம் ஆரம்ப சுகாதார மைய டாக்டர் பிரீத்தி சிறந்த மாணவர்களுக்கு பரிசு, ஊக்கத் தொகை வழங்கினார். மண்டல அமைப்பாளர் நைனார் ராஜ் நன்றி கூறினார். செயலாளர் ஜெயந்தி தொகுத்து வழங்கினார்.
பொதுச் செயலாளர் சந்திரசேகரன், துணைப் பொதுச் செயலாளர்கள் கண்ணன், ஜான் ஸ்டீபன், துணைத் தலைவர் பகவதி கலா, துணைப் பொருளாளர் கிறிஸ்டோபர் ஜட்சன், அமைப்பாளர் ஆல்பின் மனோ செல்வன் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும்
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
-
அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை