திண்டிவனத்தில் ஏரி, குளங்களை துார்வாரும் தன்னார்வலர் குழு சபாஷ்:தொய்வின்றி பணிகள் தொடர அரசு நிதியுதவி கிடக்குமா?
திண்டிவனம்: திண்டிவனத்தில் கேட்பாரற்று கிடந்த பழமை வாயந்த ஏரிகளை துார்வாரி ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் குழுவிற்கு பொது மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. திண்டிவனத்தில் 4 ஏரிகள், 13 குளங்கள் துார்ந்து விவசாயத்திற்கும், பொது மக்களுக்கும் பயன்பாடில்லாமல் பல ஆண்டுகளாக கிடந்தது. இந்த ஏரி, குளங்களை நியாயமாக அரசு கவனத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ஆனால், அரசு கவனிக்காததால் தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஒன்றன் பின் ஒன்றாக துார் வாரி, கரையை அகலப்படுத்தி, நான்கு பக்கமும் கரை உயரப்படுத்தும் உன்னதமான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக திண்டிவனம் துலுக்கானம் ஏரியை துார்வாரி, சீர்படுத்தும் வேலையை, திண்டிவனம் நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர் மேற்கொண்டனர். இதற்கான துவக்க நிகழ்ச்சியில் கலெக்டர் ே ஷக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து பணிகளை துவக்கி வைத்தார்.
இதேபோல் பழமை வாய்ந்த முருங்கப்பாக்கம் ஏரியை துார்வாரும் பணியை திண்டிவனம் நீர்நிலைகள் புனரமைப்பு குழுவினர் மேற்கொண்டனர்.
தற்போது திண்டிவனத்தில் 1,420 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிடங்கல் (1) ஏரியை துார்வாரி சுத்தப்படுத்துவதற்காக திண்டிவனம் நம்ம பசுமை இயக்கம், எலைட் ரோட்டரி சங்கம், நீர் நிலைகள் புனரமைப்பு குழுவினர் இணைந்து பணியை துவக்கினர்.
துவக்க விழாவில் அமைச்சர் வன்னி அரசு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தற்போது கிடங்கல் ஏரியை பொக்லைன் இயந்திரம் மூலம் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திண்டிவனத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பெரிய ஏரிகளை துார்வாரி அகலப்படுத்தி, ஏரியின் நடுவில் பறவைகள் அமர்ந்து இளைப்பாற திட்டு அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
திண்டிவனம் நம்ம பசுமை இயக்கம், திண்டிவனம் எலைட் ரோட்டரி சங்கம், திண்டிவனம் நீர்நிலைகள் புனரமைப்பு குழு நிர்வாகிகள் கூறுகையில், 'தற்போது தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் நன்கொடை பெற்று துார்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அமைச்சர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், பணிகள் தொய்வில்லாமல் தொடர எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி நிதியை பெற்றுத்தர உதவ வேண்டும்' என்றனர்.
'நீர் நிலைகளை பாதுகாப்போம்; திண்டிவனத்தை பசுமையாக்குவோம்' என்ற என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் கொண்ட அமைப்பிற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான அரசு உதவிகளை பெற்றுத் தர வேண்டும்.
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி