மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் : போலீசார் அறிவுரை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.

ராமேஸ்வரத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தில் ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, எஸ்.ஐ., காளிதாஸ் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மீனவர்கள் மீன்பிடிக்க சொல்லும் போது உயிர் பாதுகாப்பு உபகரணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், இந்திய கடல் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாது எனவும், நடுக்கடலில் சந்தேகத்துக்குரிய படகுகள் மற்றும் அன்னியர்கள் ஊடுருவல் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். கூட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர் சங்க தலைவர்கள் போஸ், சேசுராஜா, சகாயம் பங்கேற்றனர்.

Advertisement