சத்ரிய மகாசபை செயற்குழு கூட்டம்

புதுச்சேரி: அகில பாரதிய சத்ரிய மகாசபையின் மாநில செயற்குழு கூட்டம், லாஸ்பேட்டையில் நடந்தது. 

மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் மதிவெங்கடேசன், பிரேம் கணேஷ் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் திருமுருகன் வரவேற்றார். 

விழாவில், முன்னாள் சபாநாயகர் செல்வம் பங்கேற்று வாழ்த்தி பேசினார். தேசிய துணைத் தலைவர் சோமசுந்தரம், காரைக்கால் மாவட்ட செயலாளர் புருேஷாத்தமன் சிறப்புரை ஆற்றினார். 

துணைத் தலைவர்கள் முரளி, சந்திரன், ஜெயகுமார், செயலாளர்கள் செங்கதிரவன், வெங்கட்ராமன், வழக்கறிஞர் செல்வராசு, சஞ்சீவி, சீனுவாசன், இளஞ்செழியன், தினேஷ், அய்யப்பன், வினோத், ராஜகுரு, ராஜா, மணவாளன், முத்துக்குமார், குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர். அமைப்பு செயலாளர் ஜெகன் நன்றி கூறினார். 

கூட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு  ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையிலான செலவை அரசே ஏற்கவேண்டும். சாதி வாரி கணகெடுப்பை விரைந்து நடத்தி, அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும்.

புதுச்சேரியில் நீக்கப்பட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் அங்கீகாரம் பெற்று இயங்கிய 30 சங்கங்களை உடனடியாக சேர்க்க வேண்டும். இல்லையெனில், வழக்கு தொடர்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement