சிறை நிரப்பும் போராட்டம்: மா.திறனாளிகள் 75 பேர் கைது



கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்-நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பில், கோரிக்கை-களை வலியுறுத்தி நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் திருப்-பதி தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜெயராமன் கோரிக்கை குறித்து பேசினார். துணை தலைவர் கோட்டீஸ்வரன் நன்றி கூறினார்.


ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கா-னாவில், 6,000 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் தமி-ழகத்தில், 1,000 ரூபாய் முதல், 2,000 ரூபாய் மட்-டுமே வழங்கப்படுகிறது. இது மாற்றுத்திறனாளி-களின் வாழ்க்கையை நடத்த போதுமானதாக இல்லை. எனவே, மற்ற மாநிலங்கள் வழங்குவது போல், தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 6,000 ரூபாய் வழங்க வேண்டும்.
உதவித்தொகை கேட்டு மனு செய்து காத்தி-ருப்போர் பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிக-ளுக்கு, உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டதாக, 75 மாற்றுத்திறனாளிகளை, தாலுகா போலீசார் கைது செய்தனர்.

Advertisement