பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே எதிர்கோட்டை பகுதியை சேர்ந்தவர் துரை, 37. தச்சுத்தொழிலாளி. இவர், தன் மனைவி மீனாவின் தோழியான, 40 வயது பெண்ணை, தனிமையில் சந்திக்க அழைத்து, அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். ஆனால், அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்த நிலையில், அப்பெண் தான், தன்னை அழைத்ததாக, மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் துரை மாற்றி கூறி-யுள்ளார்.


இதனால் கடந்த, 30ம் தேதி, துரை மற்றும் அவ-ரது குடும்பத்தினர், அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று, அவரிடம் தகராறு செய்து கைகளால் தாக்கி மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக, ராயக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் அப்பெண் புகார் செய்தார். அதன்படி துரை, அவ-ரது மனைவி மீனா, 28, தாய் வள்ளி, 55, தந்தை முருகன், 58, ஆகிய, 4 பேரை, நேற்று கைது செய்-தனர்.

Advertisement