குடிகார தந்தை அடித்துக் கொலை: டி.வி.நல்லுார் அருகே மகன் கைது
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடித்து விட்டு போதையில் ரகளையில் ஈடுபட்ட தந்தையை, சம்மட்டியால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன், 50; கொத்தனார். இவரது மகன் அருண்குமார், 22; பி.காம்., பட்டதாரி.
அரசின் மது போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் மகளிடம் தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் வழக்கம்போல் குடித்துவிட்டு மனைவி மற்றும் மகளிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த அவரது மகன் அருண்குமார், 22; ஏன் இப்படி செய்கிறாய் என தட்டிக்கேட்டார். இதனால், மகனிடமும் அரசன் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த அருண்குமார் வீட்டிலிருந்த சம்மட்டியை எடுத்து அரசனை தாக்கினார். இதில், மயங்கி விழுந்த அரசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து அருண்குமாரை செய்தனர்.
மேலும்
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
-
அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை