பிரபலம் அடைவது ஒருபோதும் என் நோக்கமல்ல; மனம் திறக்கும் துக்காராம் முண்டே
மும்பை: பிரபலம் அடைவது என்பது ஒருபோதும் என் நோக்கமல்ல என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்புத்துறை கமிஷனருமான துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் துணிச்சலான, நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றவர் ஐஏஎஸ் அதிகாரி துக்காராம் முண்டே. பணியில் சமரசத்தை ஏற்காத அவரின் நேர்மையான நடவடிக்கைகளினால் 25 முறைக்கும் மேல் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டவர்.
மஹாராஷ்டிராவில் தற்போது உணவு பாதுகாப்புத்துறை கமிஷனராக இருக்கும் துக்காராம் முண்டே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர். ஹோட்டல்கள், பிரபல உணவு உற்பத்தி நிறுவனங்களில் ரெய்டு நடத்தி பூட்டு போட்டவர். துக்காராமால் உணவு உற்பத்தி நிறுவனங்கள் தூக்கத்தை தொலைக்க, உணவு பாதுகாப்புத்துறையின் அவரின் செயல்பாடுகள் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.
இந் நிலையில், பிடிஐ செய்தி நிறுவன நேர்காணலில் அவர் தெரிவித்து உள்ளதாவது;
பிரபலம் ஆவது என்பது ஒருபோதும் எனது நோக்கமாக இருந்தது இல்லை. சுகாதாரம் போன்றவையே எனக்கு மிக முக்கியம். நான் சொல்வது துக்காராம் முண்டே பற்றியது அல்ல. நாட்டை பற்றியது. நம் நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதை பற்றியது.
எனது செயல்பாடுகள் ஆக்ரோஷமானவை அல்ல. என்ன செய்ய வேண்டுமோ அதை விடா முயற்சியுடன் செய்கிறேன். எனது 20 ஆண்டுகால பணியில் இதைத்தான் நான் செய்து வருகிறேன். பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்துறையை முக்கிய ஒன்றாக கருத வேண்டும். ஒரு ஆரோக்கியமான மனிதவளம் இல்லாவிட்டால் இந்தியா வல்லரசாக முடியாது.
உணவு பாதுகாப்புத்துறை கமிஷனராக மே மாதம் பதவியேற்றதில் இருந்து 12,083 நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. உரிமங்கள் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டிகளில் 1803 ஆய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.
அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் ஆன்லைன் உணவு விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்களும் சட்டப்படி உணவு வணிக நிறுவனங்களே. ஆனால் அவர்கள் தங்களை அப்படி நினைத்துக் கொள்வது இல்லை. 4 மாதங்களில் பல்வேறு விதிமீறல்கள் காரணமாக மருந்தகங்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. ஏலக்காய் விளம்பரத்தில் நடித்த இரு பாலிவுட் பிரபலங்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அந்த விளம்பரங்களில் தோன்றிய நடிகர்கள் ஷாரூக் கான், அஜய் தேவ்கன். டைகர் ஷெராப் ஆகியோருக்கு உணவு பாதுகாப்புத்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கெடு முடிய இன்னும் அவகாசம் உள்ளது.
மஹாராஷ்டிராவில் தரமற்ற மற்றும் போலியான மருந்துகளை அளவீடு செய்வது என்பது கடினம். நான் என் துறை அதிகாரிகளுடன் ஓரு கூட்டத்தை கூட்டி, இயந்திரத்தனமாக ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறி இருக்கிறேன்.
இவ்வாறு துக்காராம் முண்டே கூறினார்.
மெடல் குத்திக்கறதுக்கே ஒருத்தர் இருக்காரு.
உங்களுக்கு நோக்கமில்லாமல் இருக்கலாம். அது உங்கள் பெருந்தன்மை. ஆனால் மக்கள் உங்களை பிரபலப்படுத்தவேண்டும். ஒன்றுக்கும் உதவாத சினிமாக்காரர்களும், அரசியல்வாதிகளும் பிரபலமடையும் இந்தக்காலத்தில், உங்களைபோன்றவர்கள் பிரபலப்படுத்தப்படவேண்டும்.மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி