தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே நில அளவைத் தகராறில் கணவன். மனைவியை தாக்கிய 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த ஏழு செம்பொன் கிராமத்தைச் சேர்ந்த முருகன், 50; அதே ஊரைச் சேர்ந்தவர் முருகன், 38; இருவரும் பக்கத்து பக்கத்து நிலத்துக்காரர்கள்.

கடந்த 4ம் தேதி முருகன் தனது நிலத்தில் இருந்த போது நில அளவு பிரச்னை காரணமாக அவரது அண்ணன் அய்யப்பன், 43; அண்ணி அம்சலேகா, 40; மற்றும் இருவர் முருகன், புனிதாவைத் தாக்கினர்.

புகாரின் பேரில் கஞ்சனுார் போலீசார் தம்பதியைத் தாக்கிய அய்யப்பன் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement