வே.பாளையத்தில் மின் விளக்குகள் அமைப்பு
கரூர்:கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம்
வழியாக ஈரோடு மாவட்டம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு, பஸ்,
லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால்,
வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல் கந்தம்பாளையம் வரை, சாலை விரிவாக்க
பணிகள் நிறைவு பெற்று, சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டது.ஆனால்,
மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், வேலாயுதம்பாளையம்
பைபாஸ் முதல், கந்தம்பாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள
நிலையில், இருளில் இருந்தது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன
ஓட்டிகள் அச்சத்தில் சென்றனர்.
இதனால், வேலாயுதம்பாளையம் பைபாஸ்
முதல், கந்தம்பாளையம் விரிவாக்க சாலையில் கம்பங்கள் அமைத்து, மின்
விளக்குள் பொருத்த வேண்டும் என, நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இந்நிலையில், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல் மின் கம்பங்கள்
அமைக்கப்பட்டு, விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து,
அந்த பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி