பெண்ணை தாக்கிய 9 பேர் மீது வழக்கு

குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், பி.உடையாப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணி மனைவி ஜெயா, 40; விவசாய கூலித்தொழிலாளி.

அதே ஊரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு, டூவீலர் வாங்க கைமாத்தாக, 10,000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார். அதை திருப்பி கேட்டபோது பிரச்னை ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் சமாதானமாகி சென்றனர். ஆனாலும், பிரச்னையை மறக்காத பிரகாஷ், கடந்த, 1 இரவு, 9:00 மணிக்கு, பி.உடையாப்பட்டி பகவதி அம்மன் கோவில் முன் ஜெயா தன் ஊருக்கு வந்துள்ளார். அப்போது, பிரகாஷ், மாணிக்கம், சண்முகம், சாந்தி, வீரா, மொட்டையன், வடிவேலு, அஞ்சலை, ஷர்மிளா ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி, அடித்துள்ளனர். இதுகுறித்து ஜெயா அளித்த புகார்படி, தோகைமலை போலீசார், ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு
செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement