இரவில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பாதிப்பு

குளித்தலை:குளித்தலை வருவாய் உட்கோட்டத்திற்குட்பட்ட குளித்தலை, மாயனுார், சிந்தாமணிபட்டி, பாலவிடுதி, கொசூர், தோகைமலை, காவல்காரன்பட்டி, சின்னைப்பனையூர், பணிக்கம்பட்டி, வல்லம், பஞ்சப்பட்டி உள்ளிட்ட துணை மின் நிலைய பகுதிகளில், தொடர்ந்து, மூன்று நாட்களாக இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், குழந்தைகள் முதல் முதியோர் வரை கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'குறைந்தளவு மின் உற்பத்தி செய்யப்படுவதால், அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கும் நோக்கத்தோடு, சில துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு மற்ற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதல் மின்சாரம் கிடைக்கும் வரை இதுபோல் மின்வெட்டு ஏற்படும்' என்றனர்

Advertisement