கடலில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பத்திற்கு த.வெ.க., நிதியுதவி
கோட்டக்குப்பம்: சின்ன முதலியார்சாவடியில் கடலில் மூழ்கி இறந்த 2 பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு, கோட்டக்குப்பம் நகர த.வெ.க., சார்பில் நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.
கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் பிரதீஷ், 15; சசிதரன், 15; இருவரும் சில தினங்களுக்கு முன் கடலில் குளித்த போது மூழ்கி இறந்தனர்.
மகன்களை பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு, கோட்டக்குப்பம் நகர த.வெ.க., சா்பில் ஆறுதல் கூறப்பட்டது. அப்போது, தொழிலதிபர் தொள்ளாமூர் கண்ணன், அந்த குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை வழங்கி ஆறுதல் கூறினார்.
நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் முகமது கவுஸ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி, விழுப்புரம் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ராஜி பொன்னப்பிள்ளை, பிரவீன் ராஜ், சுரேஷ்பாபு, சதீஷ் (எ) அபிஷேக், கோகுல்ராஜ், கபாலி, நிஜாமுதீன்.
கோட்டகுப்பம் பேரூராட்சி முன்னாள் சேர்மன் ஹமீது, விழுப்புரம் கிழக்கு மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ராஜா, ஸ்டீபன் ராஜ், கார்த்தி, அன்பரசன், கோபி, ஏகாம்பரம், நகர நிர்வாகிகள் முரளி , வெங்கடேஷ், சக்திவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
மும்பை விநாயகருக்கு ரூ.703 கோடி காப்பீடு
-
இரு வாரங்களாக போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி தேடும் பணியில் வனத்துறை தீவிரம்
-
நக்சலை ஒழித்தது போல் போதைப்பொருளையும் ஒழிப்போம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளூரை
-
விழிப்புணர்வு போட்டி மாணவர்களுக்கு பரிசு
-
பஸ் ஸ்டாண்ட் டீக்கடைக்குள் திடீர் தீ
-
வீட்டில் புகுந்த பாம்பு