விழிப்புணர்வு போட்டி மாணவர்களுக்கு பரிசு

மஞ்சூர்: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டியில் வெற்றபெற்ற மாணவர்களுக்கு மஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

மஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ்.ஐ., பாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் சாலையில் நடந்து செல்லும் போது இடதுபுறமாகவே செல்ல வேண்டும். சாலையை கடக்க நேரிடும்போது சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் ஏதாவது வருகிறதா என்பதை கண்காணித்து வாகனங்கள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே சாலையை கடக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அரசு சைக்கிள்களை வழங்குகிறது. நமது பகுதியானது மலைப்பாங்கான பகுதி என்பதாலும் கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்து மேடும், பள்ளமுமாக சாலைகள் உள்ளதால், சைக்கிள்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும். என. போலீசார் அறிவுறுத்தினர். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement