ஆபத்தான கட்டடம் அகற்றுவது எப்போது?
பல்லடம், செப். 7–
இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அரசு அலுவலகங்கள் காலி செய்யப்பட்டன. பழைய கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டும், ஓராண்டுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆபத்தான கட்டடம் அப்படியே நிற்கிறது.
பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வந்த பழமையான கட்டடம் கடுமையாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கட்டடத்தின் மேல் தளத்தில் செயல்பட்டு வந்த மண் பரிசோதனை மையத்தின் மேற்கூரை ஏற்கனவே பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து, அந்த மையம் பொங்கலுாருக்கு மாற்றப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகும், வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகங்கள் அதே கட்டடத்தில் செயல்பட்டு வந்தன. இது குறித்து ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இரு அலுவலகங்களும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.
பழைய கட்டடத்தை இடித்து அகற்றி, புதிய கட்டடம் கட்டப்படும் என கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும் கட்டடம் இடிக்கப்படாமல் உள்ளது.
விவசாயிகள் அலைக்கழிப்பு
வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகங்கள் தற்போது வெவ்வேறு இடங்களில் செயல்படுவதால், அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகள் தொடர்பாக விவசாயிகள் பல இடங்களுக்கு அலைந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இரு துறை அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்பட்டால், விவசாயிகள் அதிகாரிகளை எளிதாக அணுகி அரசு திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற முடியும்.
உடனடி நடவடிக்கை தேவை
இடிந்து விழும் அபாயத்தில் உள்ள பழைய கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்றி, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
–––
இடித்து அகற்றப்படாமல் உள்ள பல்லடம் வேளாண் அலுவலகக் கட்டடம்.
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி