பெருமாள் ஏரி நீர் இருப்பு சரிவு
குள்ளஞ்சாவடி: போதிய மழை இல்லாததால் குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரியின் நீர் இருப்பு குறைந்துள்ளது.
குள்ளஞ்சாவடி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 3200 ஏக்கர் பரப்பளவில் பெருமாள் ஏரி உள்ளது. கடலுார் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின், 11 மதகுகள் மூலம் சுற்றியுள்ள கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
கடந்த தி.மு.க., ஆட்சியில், 112 கோடி ரூபாய் செலவில் ஏரி துார்வாரும் பணிகள் நடந்தன. ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 6.5 அடியில் தற்போது நீர் இருப்பு 1.3 அடியாக குறைந்துள்ளது.
இந்தாண்டு கோடை மழை பொய்த்ததால் பெருமாள் ஏரி நீர் இருப்பு சரிந்துள்ளது. குறுவை சாகுபடிக்கு ஏரியில் இருந்து நீர் திறப்பு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.
நெய்வேலி சுரங்க நீர், 40 கன அடியாக வரத்து இருந்து வருவதாகவும், கோடை மழை இல்லாததால் ஏரியின் நீர் இருப்பு குறைந்து காணப்படுவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
குஜராத் 'லெட்டர்பேடு' கட்சிகளுக்கு குவிந்த ரூ.1,700 கோடி நிதி
-
ஹிந்து என்பது மதமல்ல; கலாசாரத்தின் அடையாளம்: மோகன் பாகவத்
-
தான் எப்படியும் படிக்கப்போவதில்லை; பிறருக்காவது உபயோகப்படட்டுமே..: அந்துமணி பதில்கள்
-
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் சீர்குலையவில்லை: முதல்வர் விஜய்
-
தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் நன்னடத்தை விதி அமல் மாவட்ட கலெக்டர் உத்தரவு
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் என்.ஆர்.காங்.,-தி.மு.க.,- காங்., மும்மூனைப் போட்டி