தென்கீரனுார் ஏரி வரத்து வாய்க்கால் புதர் மண்டி காணாமல் போனது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் ஏரிக்குச் செல்லும் வரத்து வாய்க்கால் பல இடங்களில் புதர் மண்டி நீர்வரத்து பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழில். ஆறுகளில் இருந்து வரத்து வாய்க்கால்கள் வழியாக ஏரிக்குச் செல்லும் தண்ணீர் மூலம் விவசாயம் நடக்கிறது. இங்குள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் துார் வாரப்படாததால், துார்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் இருந்து துருகம் சாலையைக் கடந்து தென்கீரனுார் ஏரிக்குச் செல்லும் வரத்து வாய்க்கால் பல இடங்களில் புதர் மண்டி வாய்க்கால் இருக்கும் இடமே தெரியாமல் உள்ளது.
இதனால் தென்கீரனுார் பகுதியில் விளை நிலங்களுக்கு தண்ணீர் சென்றடையாமல் விவசாயிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
வரத்து வாய்க்காலை சீரமைக்கக் கோரி, பலமுறை பொதுப்பணித் துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, சம்மந்தப்பட்ட பொதுப்பணித் துறையினர், ஆற்றிலிருந்து தென்கீரனுார் ஏரிக்குச் செல்லும் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்றி சீரமைத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி