விநாயகர் சிலை தயாரிப்பு பணி தீவிரம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வித, விதமான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.
மேலும், பொது இடங்களில் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை பல வடிவமைப்புகளில் பிரதிஷ்டை செய்து பூஜை நடைபெறும்.
இதற்காக, கள்ளக்குறிச்சியின் பல்வேறு பகுதிகளில் பல வண்ண, வடிவமைப்புகளில் விநாயகர் சிலைகள் ஒரு அடி முதல் 10 அடி வரை தயார் செய்யும் பணியில் சிலை வடிவமைப்போர் செய்து வருகின்றனர்.
அவ்வாறு செய்யப்படும் விநாயகர் சிலைகள் ஏமப்பேர், கடத்துார், தச்சூர், மந்தைவெளி ஆகிய பகுதிகளில் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி