ஆசிய கால்பந்து: இளம் இந்தியா தகுதி
தாஷ்கண்ட்: ஆசிய கோப்பை கால்பந்து (20 வயது) தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றது. தகுதிச் சுற்று போட்டியில் 3-0 என, வங்கதேசத்தை வீழ்த்தியது.
சீனாவில், ஆசிய கோப்பை கால்பந்து (20 வயது) 43வது சீசன் (2027, மார்ச் 24 - ஏப். 10) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்றில், 44 அணிகள் 11 பிரிவுகளாக விளையாடுகின்றன. உஸ்பெகிஸ்தானில் நடக்கும் 'பி' பிரிவு போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், சிரியா, வங்கதேச அணிகள் விளையாடுகின்றன.
சிரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. கடைசி போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது. டேனி லைஷ்ராம் (25வது நிமிடம்), விஷால் யாதவ் (60வது), அர்பாஷ் (79வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது.
மற்றொரு போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணி 3-0 என, சிரியாவை வென்றது. முடிவில் 'பி' பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த உஸ்பெகிஸ்தான் (9 புள்ளி), இந்திய (6) அணிகள் ஆசிய கோப்பையில் விளையாட தகுதி பெற்றன. இந்திய அணி கடைசியாக 2006ல் ஆசிய கோப்பையில் பங்கேற்றது.
மேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்