ஐந்தாயிரம் ஓட்டுகள்: தி.மு.க.,வில் வட்டச் செயலாளருக்கு நிர்ணயம்: உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியில் சீரமைப்பு
மதுரை: மதுரை தி.மு.க.,வில் ஒரு வட்டச் செயலாளருக்கு 5 ஆயிரம் ஓட்டுகள் வீதம் அமைப்பு ரீதியாக பிரிக்கும் பணிகள் துவங்கியுள்ளது. தொகுதி வாரியாக ஒன்றியம், பகுதி, வட்டச் செயலாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
மதுரையில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு தற்போது 3 மாவட்ட செயலாளர் என்ற எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியாக உள்ளன. இதற்காக வார்டுகளில் இருந்து மாற்றம் துவங்கியுள்ளது. இதையடுத்து தி.மு.க., தலைமைக்கழக பிரதிநிதிகள் கொண்ட சீரமைப்புக் குழுகள் மாவட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நகர் பகுதியில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஓட்டுகளுக்கு ஒரு வட்டச் செயலாளர், 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு ஒரு பகுதி செயலாளர் எனவும், புறநகரில் 2 ஆயிரம் ஓட்டுக்களுக்கு ஒரு கிளைச் செயலாளர், 20 ஆயிரம் ஓட்டுக்களுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் என்ற அடிப்படையிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 10 தொகுதிகளிலும் பூத்துகளை பிரிக்கும் பணி துவங்கியுள்ளது. தேர்தல் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கவுள்ளதால் பதவி ஆசையில் உள்ள நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: சட்டசபையில் நழுவ விட்ட வெற்றியை உள்ளாட்சி தேர்தலில் மீட்டெடுக்க மாவட்ட அமைப்புகளை தி.மு.க., வலுப்படுத்தி வருகிறது. 50 வயதை கடந்தவர்களுக்கு வ.செ., ப.செ., பதவிகள் இல்லை என கைவிரித்து விட்டது. இதனால் பலர் பதவி கனவுகளில் மிதக்கின்றனர். ஆனால் சீனியர்கள் அவர்களின் ஆதரவாளர்களை பதவிகளில் களம் இறக்க காய் நகர்த்துகின்றனர் என குற்றம்சாட்டினர்.
@block_B@
மதுரை மேற்கு - மத்திய தொகுதிக்கு ஜெயராம், ரகு பாலாஜி, ராஜா, தனச்செல்வன், வடக்கு - தெற்கிற்கு பொன்சேது, துரைகோபால்சாமி, சரவணன், முகேஷ் சர்மா, கிழக்கு - மேலுாருக்கு தமிழரசன், சசிகுமார்,ரகுபதி, அண்ணாமலை, சோமசுந்தரபாண்டியன், சோழவந்தான் - உசிலம்பட்டிக்கு வெங்கடேஷன், தமிழரசி, இளமகிழன், தங்கப்பாண்டியன், தங்கமலைப்பாண்டி உள்ளிட்டோர் மா.செ., பதவிக்கு களத்தில் உள்ளனர். திருமங்கலம் -திருப்பரங்குன்றம் மா.செ.,வாக மணிமாறன் தொடர்வார் என கட்சியினர் தெரிவித்தனர். block_B
மேலும்
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி
-
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்
-
அமெரிக்கா அச்சுறுத்தலை நிறுத்தினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; ஈரான் நிபந்தனை