மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்-ளிட்ட பகுதிகளில், கடந்தாண்டு, பருவமழை போதியளவில் பெய்யாததால், தடுப்பணைகள், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நி-லைகள் வறண்டு போனதுடன், ஆழ்துளை மற்றும் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது. மேலும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்-யப்பட்டுள்ள கரும்பு, மரவள்ளிகிழங்கு, நிலக்கடலை, தக்காளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வருவதுடன், பல்வேறு இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு நிலவுகிறது.


இந்நிலையில், அரூர் எடுத்த கொளகம்பட்டியை சேர்ந்த பெண்கள், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஏரிக்கு சென்-றனர். தொடர்ந்து, பெண்கள் ஒன்று திரண்டு வர்ண பகவானிடம் மழை வேண்டி, நல்லதங்காள் நாடகத்தில், நல்லதங்காள் தன் அண்ணன்களிடம் சீர்வரிசை கேட்கும் போது மழை வேண்டும் என கேட்பதை, ஒப்பாரி பாடலாக பாடி அழுதனர். தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு ஒப்பாரி வழிபாடு நடக்கவுள்ளது. இவ்வாறு ஒப்பாரி வைத்தால், உடனடியாக மழை வரும் என்பது ஐதீக-மாகும் என, பொதுமக்கள் கூறினர்.

Advertisement