ஏ.டி.எம்., கார்டை மாற்றி வழங்கி ரூ. 47 ஆயிரம் நுாதன திருட்டு

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாயாண்டி 73, என்பவருக்கு உதவுவது போல் நடித்து ஏ.டி.எம்., கார்டை மாற்றி வழங்கி ரூ.47,000 மோசடி செய்தவரை தென்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர் ஆக.28ல் தென்கரையில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம்., மையத்தில் இருந்த நபர் மாயாண்டிக்கு உதவுவதாக கூறினார். இதை நம்பிய மாயாண்டி, அந்த நபரிடம் ஏ.டி.எம்., கார்டை வழங்கினார். ரகசிய எண்ணையும் கூறினார்.

இந்நிலையில் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் இல்லை எனக்கூறிய அந்த நபர், வேறொரு ஏ.டி.எம்., கார்டை மாயாண்டியிடம் வழங்கிவிட்டு சென்றார். இதை மாயாண்டி கவனிக்கவில்லை. இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.47,000 எடுக்கப்பட்டது. மாயாண்டி இதுகுறித்து தென்கரை போலீசில் புகாரளித்த நிலையில், ஏ.டி.எம்., கார்டை மாற்றி வழங்கி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement