சர்ச் உண்டியல் கொள்ளை

திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள சர்ச்சில் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், உண்டியலை திருடிச் சென்றார்.

நேற்று அதிகாலை சர்ச்சை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள், கதவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். குற்றப்பிரிவு போலீசார் சி.சி.டி.வி.,யை ஆய்வு செய்தனர். அதில் வடமாநில நபர் ஒருவர் கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.

Advertisement