பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்

வால்பாறை: வால்பாறையில் உள்ள பள்ளிகளில், ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமையில் ஆசிரியர் தின விழா நடந்தது.

மாணவ, மாணவியர் பள்ளி ஆசிரியர்களுக்கு பூங்கொத்து மற்றும் பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வால்பாறை திருஇருதய ஆரம்ப பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசி தலைமை வகித்தார். விழாவில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் பரிசுகளை வழங்கினர். விழாவில், மாணவர்களுக்கான பாட்டு, பேச்சு, நடனப்போட்டிகள் நடந்தன.

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஆசிரியர்களை கவுரவித்து பரிசுகளை வழங்கினர். மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement