உழவர் சந்தையில் 32 டன் காய்கறி விற்பனை

நாமக்கல்:நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 32 டன் காய்கறி, 16.41 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை அறுவடை செய்து வந்து, நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கி செல்வது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்று, உழவர் சந்தையில் விறு
விறுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 165 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்

கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 27,555- கிலோ காய்கறிகள், 4,510 கிலோ பழங்கள், 40 கிலோ பூக்கள் என மொத்தம், 32,105 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
அவற்றை, 6,421 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 16 லட்சத்து, 41,465 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி ஒரு கிலோ, 30 ரூபாய், கத்தரி, 50, வெண்டை, 36, புடலங்காய், 50, பீர்க்கங்காய், 60, பாகற்காய், 68, முருங்கைக்காய், 30, சின்ன வெங்காயம், 75, பெரிய வெங்காயம், 64, தேங்காய், 60 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.

Advertisement