39 கொள்முதல் நிலையம் தொடங்கியதாக அறிவிப்பு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2026--27 பருவத்திற்கு தடப்பள்ளி, அரக்கன்
கோட்டை பாசன பகுதிகளில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும்
வகையில், 39 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட
நிர்வாகத்தின் செய்திக்குறிப்பு: தடப்பள்ளி,அரக்கன் கோட்டை பாசன
பகுதிகளில் விவசாயிகளின் நெல்லினை கொள்முதல் செய்யும் வகையில், 39
இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 500
மெட்ரிக் டன் நெல் இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஈரப்பதம்,
17 சதவீதத்துக்குள் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.
கிரேடு 'ஏ' (குவிண்டால்) குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.2,461, ஊக்கத்தொகை
ரூ.289 என, ரூ.2,750ம், நெல் பொது ரகம் (குவிண்டால்) ஆதார விலை, ரூ.2,441,
ஊக்கத்தொகை ரூ.159 என, ரூ.2,600 வழங்கப்படும். நெல் கொள்முதல்
நிலையத்திற்கு நெல்லை கொண்டு வரும்போது உரிய ஆவணங்களுடன் கொண்டுவர
வேண்டும். ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரும் நெல் எக்காரணம் கொண்டும்
ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. கொள்முதல் நிலைய பணியாளர் இல்லாத போதோ,
தன்னிச்சையாக கொள்முதல் நிலையத்தில் அனுமதியின்றி கொட்டப்படும்
நெல்லிற்கு நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இவ்வாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்