அதிவேக தனியார் பஸ்சால் விவசாயி பலி

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியை அடுத்த மாதம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ஜெகநாதன், 45; எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில், சத்தி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சென்றார். நல்லூர் தனியார் பள்ளி முன்பு சென்றபோது எதிரே கோவை நோக்கி வந்த தனியார் பஸ், டூ வீலர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ஜெகநாதன் பலியானார். புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்துக்கு காரணம்
சத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. விபத்து நடந்த இடத்தில் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகையோ, பேரி கார்டுகளோ வைக்கப்படவில்லை. பள்ளி முன் ஜீப் சாலையின் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் பஸ் ஓட்டுநர் அதிவேகத்தில் வலதுபுறம் பஸ்ஸை திருப்பியுள்ளார். அப்போது எதிரில் வந்த டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் பஸ் ஓட்டுனரின் அதிவேகம், அறிவிப்பு பலகை வைக்காத நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால், விபத்து நிகழ்ந்ததாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Advertisement