அமராவதி தீப ஆரத்தி திருவிழா துவக்கம்

தாராபுரம்:அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில், தாராபுரம் அமராவதி நதிக்கரையில், அகஸ்தீஸ்வரர் ஆலய வளாகத்தில், அமராவதி ஆரத்தி திருவிழா நேற்று மாலை துவங்கியது.

மதுரை ஆதீனம் விஸ்வலிங்க தம்பிரான் சுவாமிகள் ஒருங்கிணைப்பில் நடந்தது. நெல்லை உமையொருபாக ஆதீனம், கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஆகியோர், நதிகளின் புனித தன்மை பற்றி விளக்கினர். சிறப்பு விருந்தினராக பா.ஜ., மாநில பொது செயலாளர் ராம.சீனிவாசன் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், ''அமராவதி நமக்கெல்லாம் தாய். நதிகளை நாம் பெண்கள் பெயரில் ஏன் அழைக்கிறோம் என்றால், யாரால் நமக்கு கொடுக்க முடியுமோ, அவர்களை தான் தாய் எனக் அழைப்போம். நதிகள் நமக்கு வளங்களை வழங்குவதால் தாயாக கருதுகிறோம். நதிகளை அசுத்தம் செய்யாமல் போற்றி பாதுகாப்பது நம் கடமை'' என்றார்.
ஆலய வளாகத்தில், 108 யாகம் நடந்தது. இதை தொடர்ந்து அமராவதி நதிக்கு, சன்னியாசிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் தீப ஆரத்தி காண்பித்தனர். இதை நுாற்றுக்கணக்கான பக்தர் கள் கண்டு களித்தனர்.

Advertisement