ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு; திமுக முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு
சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் வீடு மற்றும் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். கடந்த ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், பணி நியமனங்கள் மற்றும் டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 30 இடங்களில் சல்லடையாக சோதனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து, விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
தற்போது நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன், உதவியாளர் கவி பிரசாத் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அமலாக்கத்துறை ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்ஐஆர் வெளியானது. கட்சி நிதி என்ற பெயரில் டெண்டரில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் பெற்றதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மீது 14 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பிரத்யேக வீடியோ!
திமுக முன்னாள் அமைச்சர் நேரு உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு; எப்ஐஆரில் வெளியான பரபரப்பு தகவல் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
https://www.youtube.com/live/CRDlcJRIbC8?si=NnogGmr8s3PEjzNN
வாசகர் கருத்து (31)
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
07 செப்,2026 - 21:36 Report Abuse
ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு திமுக முன்னாள் அமைச்சர் நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு. ஹி...ஹி...ஹி...சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் வெறும் மிளகாய் மண்டி வைத்து பிழைப்பு நடத்திய கே என் நேருவின் குடும்பம் இப்போது சுமார் பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் சொத்து சேர்த்திருக்கிறது. அவ்வளவு சொத்துகளுக்கும் பக்காவா போலி கணக்கு வைத்திருப்பார். நீங்கள் எவ்வளவு வழக்குகள் போட்டாலும் எவ்வளவு நீதிமன்றங்களுக்கு போனாலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் கட்டுமர பட்டறையில் பயின்ற வித்தைகள். இப்போது வெறும் ஆயிரம் கோடிகளுக்கு வழக்கு பதிவு செய்கிறார்களாம். போவியா அங்கிட்டு. வேற வேலை ஏதாவது இருந்தா பார்க்கவும். உங்கள் சக்தியை வீணாக்க வேண்டாம். ஹி...ஹி...ஹி... 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 செப்,2026 - 20:55 Report Abuse
முறைகேடு செய்தவர்கள் மீது வழக்கு, வழக்கு, வழக்கு, வெறும் வழக்கு பதிவு மட்டும்தான். இதுவரையில் எத்தனை வழக்குகள் விசாரிக்கப்பட்டு, முறைகேடு செய்த எத்தனை அரசியல்வாதிகள் தண்டனை பெற்றார்கள்? கணக்கு இருக்கிறதா? 0
0
Reply
Aarbinms - Bangalorw,இந்தியா
07 செப்,2026 - 19:42 Report Abuse
சாதாரண மிளகாய் கடை வியாபாரி இன்று பல லட்சம் கோடிக்கு அதிபதியானது எப்படி? 0
0
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
07 செப்,2026 - 22:09Report Abuse
ஹி...ஹி...ஹி...அது மிளகாய் கடை இல்லை, மிளகாய் மண்டி. அரியலூரிலும் திருச்சியிலும். இடையில் இருக்கும் லால்குடியில் சாலையோரம் டீயும் வடையும் வாங்கி சாப்பிட்டவருக்கு இப்போது குடும்ப உறுப்பினர்களை சேர்த்து சுமார் பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் சொத்து. அவ்வளவும் ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் மக்கள் பணத்தை ஆட்டையை போட்டு சம்பாதித்தது. விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம். 0
0
Reply
manian - ,
07 செப்,2026 - 19:32 Report Abuse
Thanks to indian judiciary nothing will happen.In china top generals are severely punished for corruption 0
0
Reply
Anbuselvan - Bahrain,இந்தியா
07 செப்,2026 - 19:01 Report Abuse
இது வரை லாலு பிரசாத் யாதவ் அவரை தவிர யாருக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் தீர்ப்பளித்து தண்டனை வழங்கப்பட்டுள்ளது? இதையும் கடந்து போக வைப்பார்கள் அரசியல் புத்திசாலிகள் 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
07 செப்,2026 - 18:38 Report Abuse
எத்தனை கோடி டெண்டர் முறை கேடாயிருந்தாலென்ன..? Supreme court வரை Step by step தப்பித்துக்கொள்ள முடியும். ஒருநாள் கூட சிறை வாசம் கிடையாது. இதுதான் Indian constitution குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்கு தந்துள்ள சட்ட பாதுகாப்பு. 0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
07 செப்,2026 - 17:57 Report Abuse
கட்டுமர பல்கலை கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற கும்பல், ஒன்னும் பண்ண முடியாது 0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
07 செப்,2026 - 17:55 Report Abuse
ஊழல் குற்றங்கள் மீது கடுமையான தண்டனை இல்லாத வரை, நம் அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டமே. கோடிகளை வாரி குவிப்பது, அதன் பின் வழக்கு அவர்கள் மீது தொடர்வது, திரும்ப ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விடுதலை ஆவது இந்த கூத்து தானே திராவிட கட்சிகளின் ஆட்சியில் தொடர்ந்து நடந்து வருகிறது வெட்கக்கேடு 0
0
Reply
Tamilan - ,இந்தியா
07 செப்,2026 - 17:36 Report Abuse
திமுகவினர் வெட்டிக்கழகத்தினரை கொள்ளையடிக்க விடவில்லை என்பதால், ஆட்சிக்கு வந்ததிலிருந்து வெறிபிடித்து அலையும் வெட்டிக்கலக கும்பல் அரசு அமைப்புக்களை தங்கள் கைக்கூலிகளாக மாற்றி அனைவரையும் மிரட்டிப்பார்க்கிறது. வெட்டிக்கலக கும்பலின் அதிரடி கொள்ளையடிக்கும் முயற்சியெல்லாம் ஒன்றும் எடுபடாது 0
0
Reply
Ambika. K - bangalore,இந்தியா
07 செப்,2026 - 17:14 Report Abuse
திருச்சி பஞ்சாபுரத்தில் 100 கணக்கான ஏக்கரை வளைச்சு போட்டு இருக்காங்க அதை புடுங்குங்க சார். 0
0
Reply
மேலும் 20 கருத்துக்கள்...
மேலும்
-
குட்டையில் விழுந்து சிறுவன் பலி
-
இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு வேலை என்.எல்.சி., நிர்வாகம் ஒப்புதல்
-
‘பாங்கு’ சாக்லேட் விற்க முயன்ற வாலிபர் கைது
-
கார் மோதி சிறுமி பலி தந்தை, தங்கை காயம் குள்ளஞ்சாவடியில் சோகம்
-
பல்லடத்தை பசுமையாக்க உண்ணாவிரதம் உ.உ.க., தலைவர் செல்லமுத்து யோசனை
-
தாராபுரம் இடைத்தேர்தல் 20 குழுக்கள் அமைப்பு
Advertisement
Advertisement