'ட்ரோல்' செய்யும் ஆண்களுக்கு நான் ஒண்ணு சொல்றேன்; சட்டசபையில் கொந்தளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி
சென்னை: "என்னை 'ட்ரோல்' செய்யும் ஆண்களுக்கு நான் ஒண்ணு சொல்றேன்; நீங்க மட்டும் என்ன எல்லாம் கத்துக்கிட்டு வரவில்லை; அடுத்த சட்டசபையில் நான் போல்டாக பேசுவேன்" என தவெக பெண் அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டசபையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியதாவது: ஒரு பெண்ணாக எங்களுக்கு இந்த சமுதாயத்தில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது, எத்தனை துயரங்களை அடைகிறோம் என்பதை இங்கே பதிவு செய்ய நான் ஆசைப்படுகிறேன். எங்களுக்கு இருக்கும் ஒரே சப்போர்ட் முதல்வர் விஜய் அண்ணா.
கடந்த 18 வருடங்களுக்கு மேலாக நான் அண்ணனுடன் பயணிக்கிறேன். எத்தனையோ கஷ்ட நஷ்டங்களை கடந்து வரும்போது அண்ணன் எனக்கு சப்போர்ட்டாக இருந்திருக்கிறார். இப்பொழுதும் அண்ணனுடைய சப்போர்ட்டில் தான் நான் இங்கே வந்து தைரியமாக நிற்கிறேன்.
ரோல் செய்தாலும்...
இந்த சட்டசபையில் நாம் பேசுகிறோம் என்றால், இங்கு நாங்கள் எல்லாம் புதிசு. எந்த ஒரு துறையில் இருந்து பயணித்தாலும், பத்திரிகையாளராக துறையில் பயணித்ததாக என்னை எந்தவிதமாக ரோல் செய்தாலும் நான் அதனை தாங்கிக் கொள்வேன். அண்ணனுடன் என்னை சேர்த்து வைத்து பேசும்போது அதனுடைய பிரதிபலிப்பு வேறு மாதிரியாக இருக்கும். ஒரு பத்திரிகையாளராக நான் எழுதி இருக்கிறேன். நாம் வாசிக்கும்போது என்னதான் ஒரு தைரியமான பெண்ணாக இருந்தாலும், ஒரு பேப்பரை கொடுத்து வாசிக்கும்போது ஒரு சின்ன தடுமாற்றம் இருக்க செய்யும்.
நீங்க மட்டும்...
எங்களை மாதிரியான பெண்களை கேலி செய்யும் ஆண்களுக்கு மட்டும் நான் ஒன்றை பதிவு செய்கிறேன். நீங்கள் மட்டும் எடுத்த உடனே எல்லாம் கற்றுக்கொண்டு இங்கே வரவில்லை. நீங்களும் எங்களை மாதிரி இங்கு வந்து பேசி பழகிக் கொண்டு தான், நீங்கள் இன்னைக்கு இங்கே போல்டாக பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இதே மாதிரி அடுத்த சட்டசபையில் எங்களுடைய எல்லா பெண்களின் பேச்சு மிக போல்டாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ரோல் செய்கிறவர்களுக்கு இதனை நான் முக்கியமாக பதிவு செய்கிறேன். எங்களுடைய தடுமாற்றம் என்பது புதிது என்ற ஒரே காரணம் மட்டுமே தவிர, எங்களுக்கு கல்வி அறிவு இல்லை அது இல்லை இது இல்லை என்று என்ன வேண்டுமானாலும் ட்ரோல் செய்யுங்கள்.
சாதிப்போம்
அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். அதுக்கு ஒரே காரணம் எங்களுடன் கூட இருக்கிற விஜய் அண்ணா மட்டும் ஒரே நம்பிக்கை, எதையும் தாங்கிக் கொள்வோம் எதையும் சாதிப்போம். இவ்வாறு அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசினார்.
Sack& Punish All Such AntiMen GenderBiased And Useless Servants of People
ட்ரோல் செய்யும் ஆண்களா ??....ஏன் பெண்கள் ட்ரோல் செய்ய வில்லையா?? .....அதுக்கு ஏன் இந்த அம்மாவுக்கு இவ்வளவு கோபம் வரனும் ??.....அரசியல் என்றால் கேலி கிண்டல் நையாண்டி என்று கேவலப்படுத்த தான் செய்வார்கள் ..இதில் எல்லாம் கரை கண்டது தி மு க ....அதையும் மீறி மக்கள் நலம் மக்கள் சேவை என்று இருந்தால் இந்த கேலி கிண்டல் பெருசாக தோன்றாது ....பெருந்தலைவர் காமராஜரை எந்த அளவுக்கு பேசினார்கள் .....ஆனால் அவருடைய கால் தூசுக்கு கூட இப்போதுள்ள அரசியல் தேறாது .....அரசியல் அரிச்சுவடி கூட லாட்டரி மந்திரிகளுக்கு தெரியாது ....
இந்த 115 நாளில் அரசுக்கு வருமானம் தரக்கூடிய எந்த செயலும் இல்லை. இது சினிமா சூட்டிங் இல்லை. தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை பிரச்னை.
NO TAKE DIVERSION !
நேர்மையையும், திறமையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். முதல்வர் வீட்டு வேலைக்கு ஆள் எடுக்கவில்லை. மக்களுக்கு தொண்டுசெய்ய எடுத்து இருக்கார். அந்த தகுதி வேண்டும்.
ஒருவேளை ஜூனியராக வேலைக்கு சேர்த்தால் நீங்கள் சொல்வது சரி . ஆனால் ஒரு கம்பெனியில் மேனேஜராக வேலைக்கு சென்றுவிட்டு அங்கு போய் எனக்கு ஒன்றும் தெரியாது இனிமேல்தான் கத்துக்கணும்னு சொன்னா , அடுத்த நொடியே வேலைய விட்டு தூக்கிருவாங்க . ஆனால் இங்க அப்படி இல்லை உங்களை பதவியை விட்டு தூக்க முடியாது , அதுதான் இப்படி பேசுறீங்க .
அதென்னங்க, "ரோல் செய்யும் ஆண்களுக்கு" அப்படின்னு எங்களை தனியா பிரிச்சு சொல்றீங்க ? பெண்களும் சேர்ந்துதான் உங்களை "ரோல்" பண்ணுறாங்க ... இந்த மாதிரி தமிழ் பேசும் திறமையை வெச்சுக்கிட்டு நீங்க எப்படி பத்திரிக்கையாளரா இருந்தீங்க அப்படிங்கற கேள்வி நியாயமா இல்லியா ? இந்த தடுமாற்றம் எல்லாம் "என்னோட ஏரியா உள்ளே வந்தா உள்ளாடையோட ஜெயிலுக்குள்ள போட்டு சாவடிச்சுடுவேன்" அப்படின்னு சொல்லும்போது இல்லியே ??
சும்மா.. அண்ணா அண்ணா என்ற ஐஸ் தேவையில்லை. அறிஞர் அண்ணாவையே பார்த்தவர்கள் தமிழக மக்கள். சட்டியிலிருந்தால் தான் அகப்பையில் வரும். 18 வருடங்கள் விஜய்யுடன் கட்சியில். மேடையில் பேசும் அனுபவமே போதும். சட்டசபையில் பேச தனி அனுபவம் தேவையில்லை.
உங்கள் ஆடியோ கேட்டோம்...எதையோ கழட்டிவிட்டு அடிப்பேன் என்று பேசிய வசனம் அதிரடியாக இருந்தது. நீங்கள் எல்லாம் பஞ்சத்துக்கு தான்டா ரவுடி நாங்கெல்லாம் பிறப்பிலேயே ரவுடி - அடுத்தமுறை இதையும் பேசுங்கள் லைக், ஷேர் எல்லாம் பிச்சுக்கும்...
மேடம்… வெட்டிப்பேச்சை. குறைச்சுக்கிட்டு வேலைய பார்த்தாலே போதும் ..