சட்டசபையில் திமுக எம்எல்ஏவுக்கு உதவிக்கரம்; விஜய் செய்த செயல் இணையத்தில் வைரல்
சென்னை: சட்டசபையில் திமுக எம்எல்ஏவை கைத்தாங்கலாக தூக்கிவிட்டு முதல்வர் விஜய் உதவிய செயல் கவனம் பெற்றுள்ளது. பேச வாய்ப்பு கேட்டு அமளியில் ஈடுபட்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய் பதிலுரையின் போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது கீழே இருந்து எழுந்திருக்கச் சிரமப்பட்ட திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனை, முதல்வர் விஜய் கைப்பிடித்துத் தூக்கி உதவினார்.
இந்த நிகழ்வு பலரால் பாராட்டப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அமைச்சர் ஆதவ் உள்ளிட்ட அமைச்சர்கள் இதற்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். திமுக எம்எல்ஏவுக்கு முதல்வர் விஜய் கைகொடுத்து தூக்கிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேச வாய்ப்பு, கொடுங்க வாய்ப்பு கொடுங்க என கேட்டு திமுகவினர் அமளி செய்தனர். உடனே... 'வாய்ப்பு தான் கொடுங்களே' என சபாநாயகரிடம் முதல் விஜய் வலியுறுத்தினார். உடனே திமுக எம்எல்ஏக்களை இருக்கையில் அமர வேண்டும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தினார். ஆனாலும் அதையும் கண்டு கொள்ளாமல் சிறிது நேரத்தில் திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
திருட்டு திமுக தங்களது முகமூடி கிழித்து தொங்கவிடப்பட்டுக் கொண்டு இருக்கவும் வெளியில் தப்பி ஓட வேண்டும் என்று தவியாய் தவித்தது. கடைசியில் ஒருவழியாக தப்பி ஓடியது.
திமுகவினர் பதில் சொல்ல முடியாததால் வெளிநடப்பு செய்து சட்ட சபையை விட்டு ஓடி விட்டார்கள்.
41 பேர் துள்ளத் துடிக்க மரித்த போது அன்று எங்கே போனது இந்த மனிதாபிமானம்? இவர் தூக்கா விட்டால் அந்த தி.மு.க எம்.எல்.ஏ எழுந்திருக்க மாட்டாரா? எதற்கு இந்த மனிதாபிமான நாடகம்?
உதவி செய்தது விசய் யின் மனிதாபிமான நிகழ்வாக இருக்கலாம். இந்த இழி பிறவிதான் சில வாரம் முன்னர் முதல்வர் விசய்யை ஒருமையிலும் அவதூறாகவும் பேசினார்.இந்த கேடு கெட்ட ஜன்மங்களுக்கு உதவுவது என்பது கொள்ளிக் கட்டையால் தலையை சொறிந்து கொள்வதற்கு சமம்மேலும்
-
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 கரண்டிகள், ஒரு மெழுகுவர்த்தி அகற்றிய டாக்டர்கள்!
-
பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு; புக்மைஷோவில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
-
ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்; பெண் ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை!
-
கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடையும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
பயணிகள் கார் விற்பனையில் பெட்ரோல், டீசல் அல்லாத வாகன விற்பனை விஞ்சியது!
-
பண்டிகை கால தள்ளுபடிகள் தவிர்ப்பு? பரிசீலிக்கும் ஆடை விற்பனையாளர்கள்