முற்றுகை போராட்டம் 65 மாற்றுத்திறனாளிகள் கைது
சிவகங்கை: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி முற்றுகையிட முயன்றதாக 65 பேரை சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளி களுக்கு அத்துறை மூலம் மாதம் ரூ.1500, வருவாய் துறை மூலம் ரூ.2000 வழங்கப்படுகிறது. இந்த நிதியில் கூடுதலாக நபருக்கு ரூ.1000 உயர்த்தி வழங்க வேண்டும்.
அதே போன்று 80 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி உதவியாளருக்கு கடந்த 5 ஆண்டாக வழங்கப்படாமல் உள்ள உதவி தொகையை விடுவிக்க வேண்டும் என வலி யுறுத்தி கலெக்டர் அலு வலகம் முன் ஆர்ப்பாட்டமும், அதனை தொடர்ந்து முற்றுகை போராட்டமும் நடத்தினர்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளி, பாதுகாப்பு உரிமைக்கான சங்க மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலாளர் கொங்கையா முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் முத்துராமலிங்க பூபதி பேசினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன் முற்றுகைக்கு முயன்றதாக 65 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.