சப்-கலெக்டர் பொறுப்பேற்பு

குளித்தலை; குளித்தலையில், புதிய சப்-கலெக்டராக மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த சேஷத்ரிமயும் தீபி சானு, நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி முடித்து விட்டு, இங்கு சப்-கலெக்டராக பொறுப்-பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்பதற்கு முன்னர், தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள, சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில், தனது தாயாருடன் சுவாமி தரிசனம் செய்தார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேந்திரன், மண்டல துணை தாசில்தார் நீதி-ராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பிரபாகரன் மற்றும் வருவாய்த்துறை அலுவ-லர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement